ETV Bharat / state

குரூப் 1 நேர்முகத் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை

author img

By

Published : Dec 11, 2019, 4:48 PM IST

சென்னை: குருப் 1 பணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்கள் கணினியில் பதிவு செய்யப்படுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC group 1
TNPSC group 1

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மோசடி நடைபெறுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் கூறியதாவது, "குரூப் 1 நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுபவர்களை தேர்வாணைய குழு உறுப்பினர் ஒருவர், மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஒருவர், ஐபிஎஸ் அலுவலர் ஒருவர், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் கொண்ட குழுவினரே நேர்காணல் செய்வார்கள்.

மேலும், நேர்காணல் செய்யும் குழுவினர் தேர்வர்களின் திறன் அடிப்படையிலேயே மதிப்பெண்களை வழங்குவர். மதிப்பெண்களைத் தேர்வுக் குழுவினர் ஒருமித்த கருத்தோடு வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களையும் கணினியில் மட்டுமே பதிவு செய்வார்கள். பென்சில் கொண்டு மதிப்பெண்களைப் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை" என்றார்.

குரூப் 1 நேர்முகத் தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பில்லை என்பதே அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு!

Intro:குரூப் 1நேர்முகத் தேர்வில்
கம்ப்யூட்டரில் மதிப்பெண் பதிவு
Body:குரூப் 1நேர்முகத் தேர்வில்
கம்ப்யூட்டரில் மதிப்பெண் பதிவு

சென்னை,

குருப் 1 பணிக்கு நடக்கும் நேர்முகத்தேர்வில் அந்த குழுவினர் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் தான் பதிவு செய்வார்கள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மோசடி நடைபெறுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்டபோது ,குரூப் 1 நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுபவர்களை
தேர்வாணைய குழு உறுப்பினர் ஒருவர் ,மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் கொண்ட குழுவினரே நேர்காணல் செய்வார்கள் .
மேலும் தேர்வர்களை
நேர்காணல் செய்யும் குழுவினர் தேர்வர்களின் திறன் அடிப்படையிலேயே மதிப்பெண்களை வழங்குவர். மதிப்பெண்களை
தேர்வு குழுவினர் ஒருமித்த கருத்தோடு கம்ப்யூட்டரில் பதிவு செய்வார்கள்.

அவ்வாறு பதிவாக கூடிய மதிப்பெண்களையும் கணினியில் மட்டுமே பதிவு செய்வார்கள் என்றும் பென்சில் கொண்டு மதிப்பெண்களை பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை என்று அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே குரூப்1 நேர்முகத் தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பில்லை என்பதும் அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.