ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜி செய்த மோசடிக்கு ஆதாரங்கள் உள்ளன - உயர் நீதிமன்றத்தில் காவல் துறை பதில்

வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

Orders reserved on then minister Rajendra balaji bail case, MHC

author img

By

Published : Nov 30, 2021, 10:58 PM IST

சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழ்நாடு பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபு ராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் கோரி மனு

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்தப் புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் மீது அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய்ப் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதி நிர்மல்குமார் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு ரெடி

அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் நல்லதம்பி என்பவர் தான் குற்றவாளி என்றும், அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதில் தொடர்பில்லை என்றும்; விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்றும் வாதிட்டார்.

’23 பேர் சாட்சிக்கு உள்ளனர்’

காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரானப் புகாரில் இருபத்திமூன்று சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நல்ல தம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: MullaiPeriyarDam: இப்போ 142 அடி; விரைவில் 152 அடி - அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.