சென்னை நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற 46ஆவது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ’பள்ளியில் படிக்கும் போதே மூன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு, நான்காம் வகுப்பு பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என நடத்தினால் படிக்கக்கூடிய மாணவர்கள் டிராப் அவுட் ஆகக்கூடிய நிலை ஏற்படும். எனவே, அதனைத்தடுக்க தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக’ தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ’தமிழ்நாட்டின் கல்வி கொள்கையை வகுப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது; அதன் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கையை அறிவிப்பார்’ எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆராய்ந்ததில் ஏராளமான பாதகங்கள் அதில் இருப்பதனாலேயே தமிழ்நாட்டிற்கு தனி கல்விக் கொள்கை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும், இதற்கு ஆளுநர் ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் ஆட்சி'- அமைச்சர் பொன்முடி பெருமிதம்!