ETV Bharat / state

'அன்று ரஜினி, இன்று விஜய் பற்றி கேட்கிறீர்கள், இது தமிழ்நாட்டின் சாபக்கேடு' - திருமாவளவன் விமர்சனம் - thirumavalavan about vijay

சினிமாவில் இருந்து வரும் நபர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலம் இருந்தால் போதும் முதலமைச்சராகி விடலாம் என நினைக்கின்றனர் எனவும், தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த சாபக்கேடு உள்ளது எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 22, 2023, 10:02 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து, ஆளுநர் ஆர்.என். ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று(ஜூன் 21) தொடங்கப்பட்டது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் கையெழுத்தை மதிமுக முதன்மைச்செயலாளர் துரை வைகோ படிவத்தில் பெற்றுக் கொண்டார். பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய துரை வைகோ, "தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சரவை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதோடு மறுக்கவும் செய்கிறார், ஆளுநர். திராவிட இயக்க கொள்கைகள், சமூக நீதி, மாநில சுயாட்சி பற்றி ஆளுநர் தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்.

கல்லூரியில் தேர்ச்சி பெற்ற 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களின் பட்டத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆளுநர் அதற்குக் கூட நேரமில்லாமல் இருக்கிறார். ஆனால், மதவாத சக்திகளின் ஊதுகுழலாக மேடைதோறும் வாரம்தோறும் பேசுவதற்கு அவருக்கு நேரம் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் மனுவை கொடுக்க உள்ளோம். அதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் முதல் கையெழுத்தைப் பெற்றோம்.

தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போது விசிக தலைவர் திருமாவளவனிடம் இதற்கான படிவத்தில் கையெழுத்தை பெற்று இருக்கிறோம்" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் பெயரைக் கூட உச்சரிக்க கூச்சப்படுகிறார். சமூக நீதி, சமத்துவம் என்ற சொற்களையும் உச்சரிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். ஒரு சனாதன பிற்போக்குவாதி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது வருத்தம் அளிக்கிறது. அவரை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் துவங்கிவிட்டது.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பெரும்பான்மையான மக்களும் ஆளுநரின் இந்தப் போக்கை கண்டிக்கிறார்கள். அதோடு அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து அவரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கிறார்கள். அந்த வகையில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதற்காக மதிமுக துவங்கியிருக்கும் இந்த கையெழுத்து இயக்கம் மூலமாக ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களின் கையெழுத்தைப் பெறத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் தொடர்ந்து பதவியில் இருந்தால் மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார். சட்டம் ஒழுங்கினை சீர்குலைப்பதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவார். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களைத் தூண்டி விட்டு மணிப்பூரில் இன்று நடப்பது போன்ற பாதிப்பை ஏற்படுத்த வழி வகுப்பார். மிகவும் ஆபத்தான ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது ஏற்புடையதல்ல. மதிமுகவின் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டியது இன்றியமையாதது.

குடியரசுத் தலைவர் சுதந்திரமாக செயல்பட மாட்டார் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் குரல் இதுதான் என்பதை டில்லியில் அமர்ந்திருப்பவர்கள் அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்’’ என்றார்.

நடிகர் விஜயின் சமீபத்திய பேச்சுகள் அவர் அரசியல் வருகைக்கான அறிகுறியா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "அரசியலுக்கு வரட்டும். அதனால் ஒன்றுமில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர் பற்றி படிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். அதனை வரவேற்கிறோம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வர வேண்டும். பொதுவாக சினிமாவில் இருந்து வரும் நபர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலம் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் சினிமாவில் உள்ள நபர்கள் அவர்கள் வேலையைப் பார்க்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் எல்லா வேலையும் முடிந்து, மார்க்கெட் போகாத நேரத்தில் அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்துவிடலாம் என நினைக்கின்றனர். அந்த மாறி இல்லாமல் முற்போக்கான கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். அதுதான் தமிழகத்தின் தேவையாக உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கடைசி கால கட்டத்தில் சினிமா நடிகர்கள் ஆட்சிக்கு வரலாம் என்று கணக்குப் போடுவதில்லை.

கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், தேசிய அளவில் பிரபலமான அமிதாப் பச்சன் எனப் பலர் இதனை செய்யவில்லை. எம்ஜிஆர், என்.டி.ஆர் போன்றோர் அதில் விதிவிலக்கு. அதே அடிப்படையில் அனைவரும் வந்துவிட முடியாது. அது மாதிரி தமிழகத்தில் வந்தவர்கள் எல்லாம் பின்னுக்குச் சென்று விட்டனர். மக்களுக்குப் பணியாற்றி சிறைக்குச் சென்றவர்கள் தியாகம் செய்தவர்கள் என அனைவரையும் ஓரம் கட்டி ஹைஜாக் பண்ணி விடலாம், சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது.

மணிப்பூரில் அவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், விஜய் பற்றி கேட்கிறீர்கள், இதுவே மக்களுக்கு எதிரானது தான். ஊடகங்கள் தான் இது போன்ற விஷயங்களை மிகைப்படுத்துகிறது. ஊடகத்திடம் சமூக அரசியல் பார்வை வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று காலம் முழுவதும் கேட்டீர்கள். இப்போது விஜய் வருவாரா என்று கேட்கிறீர்கள். பின்னர் அஜித் வருவாரா என்பீர்கள். கோல்வாக்கரை படியுங்கள், சாவர்க்கரை படியுங்கள் என்று சொல்லாமல் அம்பேத்கரை படியுங்கள் என்று விஜய் கூறியதில் மகிழ்ச்சி.

விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பதற்றம் இல்லை. நீங்கள் தான் பதற்றம் ஆகிறீர்கள். இதுபோன்ற கேள்விகள் முட்டாள்தனமாக உள்ளது. எந்த மாநிலத்திலும் சினிமா பிரபலங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. ஊடகத்தினர் தான் இது போன்று மிகைப்படுத்துகிறீர்கள், அவர் அரசியலுக்கு வந்த பிறகு இதை எல்லாம் கேளுங்கள்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், "அதிமுகவை ஓரம் கட்டுவது தான் பாஜகவின் முதல் வேலை. தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ள பாஜக நினைக்கிறது. இது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் போன்றவர்களுக்குத் தெரியவில்லை. பாஜக குழி வெட்டுவது திமுகவிற்கல்ல அதிமுகவிற்கு, அவர்கள் விழிப்போடு இருந்தால் சிறிது காலத்திற்கு கட்சியை நடத்தலாம்.

தமிழ்நாட்டில் பாஜகவை மிகைப்படுத்துவதும் ஊடகங்கள் தான். தினம்தோறும் அண்ணாமலையைப் பற்றி செய்தி போடுகிறீர்கள். சம்பந்தமே இல்லாமல் குதர்க்கமாக அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். இது ஊடகங்களுக்கு முக்கியமான செய்தியாகத் தெரிகிறது.

பாஜக என்ற ஒரு கட்சியை தமிழகத்தில் கிடையாது. அது இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதே ஊடகங்கள் தான். கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையைத் திறப்பதற்காக ஒப்புதல் அளித்துவிட்டு பிறகு வர முடியவில்லை என்று கூட கூற முடியாத நிலைமைக்கு குடியரசுத் தலைவர் நெருக்கடியில் இருக்கிறார்.

ஆனால், நாங்கள் குடியரசுத் தலைவர் அவருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போதைய ஆளுநர் நூறு சதவீதம் ஆர்எஸ்எஸ் தொண்டராக மட்டுமே செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையா, ஆர்எஸ்எஸ் அலுவலகமா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு பிற்போக்கு சக்திகளின் இடமாக ஆளுநர் மாளிகை இருக்கிறது.

பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்தால் விசிக நிச்சயம் எதிர்க்கும். மணிப்பூருக்கு பிரதமர் நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். ஒரு மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறுபவர்கள் மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்வார்களா" என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு: நீரியல் நிபுணர்கள் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.