சென்னை: செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (59). இவர், இன்று (அக்.11) காலை குன்றத்தூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக இவர் செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் ராஜேஸ்வரியிடம் முகக்கவசம் ஏன் அணியவில்லை என கேட்டு அவரை தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த ராஜேஸ்வரி அவர்களை காவல் துறையினர் என நினைத்துள்ளார். ராஜேஸ்வரியிடம் அந்த நபர்கள் தங்க நகையை பத்திரமாக பையில் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
நூதன முறையில் திருட்டு
இதனை நம்பிய ராஜேஸ்வரி 12 சவரன் தங்க நகையை கழற்றி அதில் ஒருவரிடம் கொடுத்துள்ளார். தங்க நகையை வாங்கிய உடன் இருவரும் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை: கடை உரிமையாளர் கைது