புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கனகசெட்டிகுளம் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டி இருப்பதாக, அத்தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரத்திற்குப் புகார் சென்றது. இதையடுத்து சர்வேயர், காவல் துறையினர் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் கல்யாணசுந்தரம் அங்கு சென்றார்.
அப்போது நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோலன் என்பவர், வந்த காரணம் குறித்து கேட்டுள்ளார். அவரிடம் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தனது பாதுகாப்பிற்காக செல்போனில், ஜோலன் வீடியோ எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாணசுந்தரம், ’செல்போனை பிடுங்கி உடையுங்க..!’ என ஆதரவாளர்களுக்கு உத்தரவு போட்டார். உடனே ஜோலன் செல்போனை, ஆதரவாளர்கள் பிடுங்கி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.