ETV Bharat / state

குப்பைக் கதை! கரோனாவால் கலங்கும் 'கந்தல் சேகரிப்பாளர்கள்' - perungudi garbage dump yard

சென்னை: நாம் அன்றாடம் பயனற்றது என ஒதுக்கும் குப்பைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்துவரும் ஒரு கூட்டம் திக்கற்று திகைத்து நிற்கிறது. கரோனா ஊரடங்கின் தாக்கம் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக 'கந்தல் சேகரிப்பாளர்கள்' வாழ்வாதாரத்தைப் பற்றிய விரிவான தொகுப்பு.

கந்தல் சேகரிப்பாளர்கள்
கந்தல் சேகரிப்பாளர்கள்
author img

By

Published : Jun 13, 2020, 9:46 PM IST

Updated : Jun 16, 2020, 5:46 PM IST

தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயனற்றவையென வீசும் குப்பைகளை வாழ்வாதரமாகக் கொண்டு ஒரு கூட்டம் வாழ்ந்துவருகிறது. அவர்களைக் கந்தல் சேகரிப்பாளர்கள் எனலாம். ஒருவருக்கு பயனற்றது மற்றவருக்குப் பயனளிக்கலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கந்தல் சேகரிப்பாளர்கள்.
அவர்கள் குப்பைகளில் கிடக்கும் மின்னணு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர் கழிவுகள், இரும்புக் கழிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து காயிலாங் கடைகளில் எடைக்குப் போட்டு சொற்ப காசுகளைப் பெற்று பிழைத்துவருகின்றனர்.

அப்படி சென்னையிலிருக்கும் 269 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடுங்கையூர் குப்பை கிடங்கையும், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருங்குடி குப்பை கிடங்கையும் மட்டுமே நம்பி 100க்கும் மேற்பட்ட 'கந்தல் சேகரிப்பாளர்கள்' வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் சென்னையின் 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு அள்ளப்பட்டும் சுமார் 5 ஆயிரம் டன் குப்பைகளிலிருந்து கிடைக்க கூடிய மின்னணு, பிளாஸ்டிக், பேப்பர், இரும்புக் கழிவுகளைச் சேகரித்து விற்றுவந்தனர்.

குப்பைக் கதை! கரோனாவால் கலங்கும் 'கந்தல் சேகரிப்பாளர்கள்' - சிறப்பு தொகுப்பு

இந்த நிலையில் அவர்களைப் பாதிக்கும்படி சென்னை மாநகராட்சி இரண்டு குப்பை கிடங்குகளிலும் மறுசுழற்சிப் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தது. அதனால் அவர்களின் கந்தல் சேகரிப்பிற்கு தடைவிதிக்கப்பட்டது.

இருந்தும் பிழைக்க வழி தெரியாத அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வப்போது கந்தல்களை சேகரித்து கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், ஒரு வேளை உணவினை உண்டு பிழைத்து வந்தனர். இந்த நிலையில்தான் வந்தது கரோனா ஊரடங்கு.

கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மாநகராட்சி பணியாளர்கள் வைரஸ் பரவல் காரணமாக இரண்டு கிடங்குகளிலும் கந்தல் சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர்.

அதனால் கந்தல் சேகப்பாளர்கள் வேறு வழி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி, அவ்வப்போது தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளில் கந்தல்களை சேகரித்து பிழத்து வருகின்றனர். குப்பைகளை வாழ்வாதாரமாகக் கொண்ட கந்தல் சேகரிப்பாளர்கள் கரோனாவால் பாதித்துப் போல, அவர்கள் கந்தல்களை விற்கும் காயிலாங் கடை முகவர்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து காயிலாங் கடை முகவர் சாகுல் ஹமீது என்பவர் கூறுகையில், "குப்பை கிடங்குகளிலிருந்து கந்தல் சேகரிப்பாளர்கள் கொண்டுவரும் பொருள்களை வைத்தே பலர் காயிலாங் கடையை நடத்திவருகின்றனர். ஆனால் அவர்கள் ஊரடங்கு காரணமாகக் கிடங்கிற்கு செல்வதில்லை அதனால் கந்தல்கள் கிடைக்காததால் அவர்களும் பாதிப்படைந்து நாங்களும் பாதிப்படைந்துள்ளோம்.
வீடுகளில் உள்ள பழைய பேப்பர், புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருள்களை ஒரு சிலர் விற்கிறார்கள். அதுதான் தற்போதைய வருமானம் அதுவும் கூட வயிற்றை நிரப்புவதில்லை" எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் மார்ச் 25ஆம் தேதி முதல் தற்போது வரை சென்னை நகரில் மட்டும் உள்ள 900 காயிலாங் கடை முகவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. கரோனா வைரஸ், அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை எப்போது சகஜ நிலைக்குத் திரும்பும் எனக் கந்தல் சேகரிப்பாளர்களும், முகவர்களும் நாள்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் உள்ள குப்பைக் கிடங்கை மூட பொதுமக்கள் கோரிக்கை!

Last Updated : Jun 16, 2020, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.