ETV Bharat / state

உலகம் முழுவதுமே 6 கதைதான் இருக்கு - கதை காப்பி குற்றச்சாட்டுக்கு இயக்குனர் மிஷ்கின் பதில்! - adharam trailer launch

சென்னையில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், ஆதாரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

ஆதாரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா

author img

By

Published : May 24, 2023, 6:12 PM IST

சென்னை: MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார் மற்றும் ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுக நடிகர்களான அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாளர் பிரதீப் கூறியதாவது, “நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான்.

அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன்” என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின், “ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார் என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள். ஆனால் கவிதாவின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது.

அவரது தந்தை TN பாலுவின் படங்களான சங்கர்லால் முதல் பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப்படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன்.

அவர் இது என் முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன் அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் என்றார். அந்த உண்மைக்காக அவரைப் பாராட்ட வேண்டும் என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக்கொள்ள் வேண்டும். நான் லியோவில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போது தான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள் அதனால் சொல்லி விட்டேன்.

இந்தப்படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என தன் வாழ்த்துகளை படத்திற்கும் படக்குழுவினருக்கும் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் கதிரவன் பேசியதாவது, “இயக்குனர் TN பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி, என் அப்பா அந்த காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார். இந்த படத்தின் கதை அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” எனக் கூறினார். இதன் பின்னர் எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன், “கவிதாவை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும் காரணம் அவரின் தைரியம். அவர் எடுத்துக்கொண்ட கதையை எடுக்க தைரியம் வேண்டும். அவருக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என அனைவரும் படத்திற்கும் படக்குழுவிற்கும் தம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய Y G மகேந்திரன், “நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி. TN பாலு மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர். அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை. அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார். கதை அருமையாக நகரும், அது படம் பார்க்கும்போது தெரியும்.

இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும், ஆனாலும் அது ஒரு முயற்சிதான். மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்று கூறி தன் உரையை முடித்தார். இறுதியாக பேசிய இயக்குநர் கவிதா, “இந்த விழாவிற்கு வருகை தந்த மிஷ்கின், ஒய் ஜி மகேந்திரன், சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள், என் வீட்டில் வாலாக இருந்தது நான் தான். இது என் முதல் படம், என் தந்தை TN பாலு என்பதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார். யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என தோன்றியது, ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் வந்த காரணம் என் தந்தை. ஒய் ஜி மகேந்திரன் நடிக்க காரணம் என் தந்தை.

இந்த பெருமை போதும் எப்போதும் பழையதை மறக்காதீர்கள், புதுப்பித்துக்கொண்டே இருங்கள். என் தயாரிப்பாளர் ஒரு பிச்சைக்காரன். பிச்சைக்காரன் படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம். என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல, பதிந்த விசயத்தை மறைக்கப்பட்டது பற்றித்தான். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை" என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் படங்களில் அதிகம் நடித்ததில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.