ETV Bharat / state

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... ஈபிஎஸ், ஓபிஎஸ் இருக்கைகள் மாற்றப்படவில்லை..? - EPS

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
author img

By

Published : Oct 17, 2022, 9:14 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக் 17) காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதன்பின் சட்டப்பேரவை தொடர் நடத்த உள்ள நாட்கள் பற்றிய முடிவு எடுக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படும்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் நிலை, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான நிரந்தர மசோதா ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எதிர்கட்சித் துணைத்தலைவர் பொறுப்பிற்கு உள்ள சிக்கலின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி இருக்கைகள் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இதனிடையே ஈபிஎஸ் தரப்பில், ஆர்.பி.உதயகுமார் எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவியில் தொடர்வார் என்று சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் - சபாநாயகர் அப்பாவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.