ETV Bharat / state

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: தமிழக அரசு அறிக்கை வெளியீடு!

Tamilnadu Govt Released Cauvery Related Activities: அட்டவணைப்படி ஒவ்வொரு மாதம் தர வேண்டிய குறைபாடு நீரினை பெற்று தர காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுப்பது இல்லை என தமிழ்நாடு அரசு அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

the-tamil-nadu-government-has-released-a-report-on-cauvery-related-activities
காவிரி விவகாரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 8:30 PM IST

சென்னை: 2023-2024 பாசன ஆண்டில் கர்நாடகாவிடம் இருந்து உரிய நீர் பங்கைப் பெற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை அறிக்கையாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் கடந்த ஜீன் மாதம் 69.25 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தது பின் அட்டவணைப்படி பில்லிகுண்டுலுவில் பெறப்பட வேண்டிய நீத் ஆகியற்றை கருத்தில் கொண்டு குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்குவதற்காக 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது.

2023-2024 ஆண்டில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 81 முதல் 85வது கூட்டங்கள் 30.06.2023 முதல் 28.08.2023 வரை நடைபெற்றது. அதே போல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 21 முதல் 23வது கூட்டங்கள் ஜீன் 16, ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் தமிழ்நாடு உறுப்பினர்கள் மிழ்நாட்டின் பங்கை கர்நாடகா குறிப்பிட்ட அட்டவணைப்படி அளிக்க வலியுறுத்தியும் கர்நாடக அரசு அட்டவணைப்படி நீரை அளிக்கவில்லை. ஜீன் மாதம் முதல் நீர் குறைபாடாகவே அளிக்கப்பட்டுவந்தது. இதை நீர் குறைபாட்டை சரி செய்ய தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

கர்நாடகாவில் உள்ள 4 பெரிய நீர்த்தேக்கங்களின் 09.08.2023 நிலவரப்படி சராசரி ஆண்டில் கிடைக்க வேண்டிய நீரில் 42.54% குறைபாடு உள்ளது என காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கணக்கிட்டுள்ளது. இவ்வாறு குறைபாட்டை கணக்கிடுவது மத்திய அரசின் 01.06.2018 தேதியிட்ட அரசிதழ் அறிக்கையின்படி இருக்க வேண்டும். இதன்படி, 09.08.2023 அன்று வரை தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 37.971 டி.எம்.சி நீர் குறைப்பாடு இருந்தது.

தமிழ்நாடு அரசு சார்பாக குறைப்பாடான நீரை உடன் அளிக்கவும் மற்றும் அதன் பிறகு அட்டவணைப்படி அளிக்கவும் கர்நாடக அரசை வலியுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இவைகளை கருத்தில் கொள்ளாமல் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தானே கணக்கிட்டு தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரை பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், 10.08.2023 அன்று நடந்த 84வது கூட்டத்தில் 11 ஆகஸ்டு 2023 முதல் அடுத்த 15 நாட்களுக்கு 15,000 கனஅடி நீர் விடுவிக்க கர்நாடக அரசிற்கு அறிவுறுத்தியது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 11.08.2023 அன்று நடைபெற்ற 22வது கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக குறைந்தது வினாடிக்கு 24,000 கன அடி தேவை என்றும் ஆகையால் கிடைக்க வேண்டிய குறைபாட்டு நீரை உடனளிக்கவும், அதை தொடர்ந்து அட்டவணையின்படி நீரை பெற்றுத்தர கேட்டுக்கொண்டது.

ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக, கர்நாடகம் விடுவிக்க வேண்டிய நீரின் அளவை 15,000 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாக எந்த முகாந்திரமும் இல்லாமல் குறைத்தது. மேலும், பில்லிகுண்டுலுவில் 01.06.2023 முதல் 09.08.2023 வரையிலான 37.971 டிஎம்சி பற்றாக்குறையை கர்நாடகா அளிக்க காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தவறிவிட்டது.

28.08.2023 அன்று நடைபெற்ற கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு 27.08.2023 வரை குறைபாடு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய மீதமுள்ள நீர் 8.988 டி.எம்.சி. என கணக்கிட்டுள்ளது. இருப்பினும் இந்த நீரை பெற்றுத்தர எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் 29.08.2023 முதல் 12.09.2023 வரை கிடைக்க வேண்டிய நீர் குறைபாட்டை கணக்கில் கொண்டு, 9.341 டிஎம்சி (7200 கனஅடி வீதம்) என கணக்கிட்டு அதையும் எக்காரணமும் இல்லாமல் வினாடிக்கு 5,000 கன அடி என குறைத்து பில்லிகுண்டுலுவில் அளிக்க கர்நாடகாவை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், 29.08.2023 அன்று நடைபெற்ற 23வது கூட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 5,000 கனஅடியாக நீர் வழங்க எந்த அடிப்படையும் இல்லாமல் குறைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், 01.06.2023 முதல் 27.08.2023 வரையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய குறைபாடு நீர் 8.988 டி.எம்.சி பற்றி எவ்வித அறிவுறுத்தலும் அளிக்கவில்லை. தமிழ்நாடு குறைந்தது வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் 28.08.2023 முதல் 10 நாட்களுக்கு கர்நாடகா பில்லிகுண்டுலுவில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் தமிழ்நாட்டிற்கு குறைந்தது வினாடிக்கு 24,000 கன அடி வீதம் ஆகஸ்டு மாதத்தில் அளிக்கவும், அதன்பின் அட்டவணைப்படி அளிக்கவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க ஆணையிடுமாறு வேண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் 31.08.2023 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய 01.06.2023 முதல் 27.08.2023 வரையிலான குறைபாட்டு நீரான 8.988 டிஎம்சி (வினாடிக்கு 7000 கன அடி) காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கணக்கிட்ட கர்நாடகா அளிக்க எந்த நடவடிக்கையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுக்காமலிருப்பது, ஆணையம் தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்ட செயலாகும். மேலும், பற்றாக்குறையை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 29.08.2023 முதல் 12.09.2023 வரை அளிக்கப்பட வேண்டிய 9.341 டி.எம்.சி என அதுவே கணக்கிட்ட போதிலும் (வினாடிக்கு 7200 கன அடி) அதையும் வினாடிக்கு 5000 கன அடியாக குறைத்துள்ளது எப்படி கருதினாலும் சரியானது அல்ல.

மேலும், எதிர்காலத்தில் பில்லிகுண்டுலுவில் நீரை பெறுவதை உறுதி செய்வதற்கும், அறிவுறுத்துமாறும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட வேண்டியும் அது கர்நாடகாவுக்கு தகுந்த ஆணையை பிறப்பிக்க வேண்டியும் அந்த மனுவில் உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கினை அவசரம் மற்றும் அவசியம் கருதி, 01.09.2023 அன்று தமிழ்நாடு அரசு கோரியதன் பேரில், உச்சநீதிமன்றம் 06.09.2023 அன்று விசாரணை செய்ய ஆணையிட்டுள்ளது. என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Cauvery Water Dispute: "கர்நாடக அரசு ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது" - CWMA உச்சநீதிமன்றத்தில் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.