ETV Bharat / state

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன்: ஆந்திராவில் காவல் துறையினரால் மீட்பு

அம்பத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் மகனை ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் மீட்டனர்.

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன்: ஆந்திராவில் காவல்துறையினரால் மீட்பு

author img

By

Published : Mar 23, 2022, 10:31 PM IST

சென்னை: அம்பத்தூரை அடுத்த பாடி, சத்தியவதி நகர், 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (57). இவர் அம்பத்தூர் அடுத்த அத்திபட்டில் ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனி நிர்வாகத்தில், சரவணனுக்கு உறுதுணையாக அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி (27) இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(மார்ச் 22) இரவு ஆதர்ஷ் சுப்பிரமணி கம்பெனியில் வேலை முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர் தன் வீட்டருகே தெருவில் வந்து கொண்டிருந்தார்.

சிசிடிவி உதவியுடன் குற்றவாளி கண்டுபிடிப்பு

அப்போது, எதிரே வந்த ஒரு கார், இவரது காரை வழிமறித்தது. பின்னர், அதில் இருந்து இறங்கிய 3 நபர்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கத்தியைக் காட்டி மிரட்டி காரிலிருந்து இறக்கியுள்ளனர். பின்னர், அந்த மர்ம கும்பல் அவர்கள் வந்த காரில் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கடத்திச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தின் தந்தை சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார்.

ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை வாடகை கார் மூலம் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பதிவின் மூலம் காரின் உரிமையாளரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

காவல்துறையினரின் அதிரடி கைது

பின்னர், அவரது காரில் பொருத்திய ஜி.பி.ஆர்.எஸ் கருவியின் மூலம், கார் சென்று கொண்டிருந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, கார் கும்மிடிபூண்டி வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்த, ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை காவல்துறையினர், கடத்தப்பட்ட காரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். பின்னர், ஆந்திர மாநிலம், காளாஸ்திரி பகுதியில் சென்ற காரை நள்ளிரவு காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர், காவல்துறையினர் கடத்தப்பட்ட ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை காரிலிருந்து மீட்டனர். மேலும், காவல்துறையினர் காரை பறிமுதல் செய்ததுடன் 3 கடத்தல்காரர்களைப் பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, லட்சுமி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (37), முகப்பேர் மேற்கு, 3வது பிளாக்கை சேர்ந்த சிலம்பரசன் (20), அயப்பாக்கம், அபர்ணா நகர், மதர்லேண்ட் தெருவைச் சார்ந்த ஜீவன்பிரபு (21) ஆகியோர் எனத் தெரியவந்தது.

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், ”சரவணனும் செந்தில்குமாரும் உறவினர்கள். அவர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கம்பெனியை மூடிவிட்டனர்.

பின்னர், செந்தில்குமார் தனக்கு சேர வேண்டிய பங்கு தொகையான ரூ.1 கோடி கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 2019ஆம் ஆண்டு சரவணனின் அண்ணன் ராஜசேகர் (63) என்பவரை பணம் கேட்டு கடத்தினர்.

இதுதொடர்பாக செந்தில்குமார் உள்பட 5 பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், செந்தில்குமார் தொடர்ந்து ரூ.1கோடி கேட்டு சரவணனை மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையில், பணம் பறிக்கும் நோக்கத்தில் சரவணனின் மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை, செந்தில்குமார் காரில் கடத்திச் சென்றுள்ளார்.

மேலும், அவரிடம் ரூ.1 கோடி கொடுக்கவில்லை என்றால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் அவரை தோள்பட்டையிலும் கத்தியால் வெட்டி உள்ளனர். இதற்கிடையில் போலீசார் கடத்தல் கும்பலை ஆந்திராவில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செந்தில்குமார், சிலம்பரசன், ஜீவன்பிரபு ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், கடத்தல் கும்பலிடம் இருந்து கார் மற்றும் கத்திகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபர் கடத்தப்பட்ட சில மணி நேரத்திலேயே கடத்தல் கும்பலை பிடித்த கொரட்டூர் காவல்துறையினரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

இதையும் படிங்க:விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.