ETV Bharat / state

மூதாட்டியை கட்டி போட்டு நிர்வாண வீடியோ எடுத்த கொள்ளையர்கள் கைது - Crime news

மூதாட்டியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 24, 2023, 9:43 PM IST

சென்னை: அரும்பாக்கம் டாக்டர் தெருவைச் சேர்ந்தவர் கங்கா (72). இவரது கணவர் உமாசங்கர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவர் இறந்ததால் தனது மகன் மகாதேவ் பிரசாத் உடன் கங்கா வசித்து வருகின்றார். கடந்த 20ஆம் தேதி கங்கா, வீட்டில் தனியாக இருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை கட்டி போட்டுள்ளனர்.

பின்னர் மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், 83 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இதனிடையே மூதாட்டியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து வெளியில் சொன்னால் சமூகவலைதளத்தில் வீடியோவை பரப்பி விடுவதாக கூறி மிரட்டி விட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து முக்கிய கொள்ளையன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களான துரைசிங்கம், ரமேஷ், மணிகண்டன், துரைப்பாண்டி ஆகிய ஐந்து பேரை அரும்பாக்கம் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில், மணிகண்டன் மூதாட்டியின் மகன் மகாதேவ் நடத்தும் டிரேடிங் கம்பெனியில் பணியாற்றி வந்ததும், கடந்த ஏழு மாதங்களாக மகாதேவ் மணிகண்டனுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும் டிரேடிங் மூலமாக மகாதேவ் முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றி வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் மணிகண்டன் திட்டமிட்டு அவரது நண்பர்கள் மூலமாக கொள்ளையை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மூதாட்டியின் நிர்வாண படத்தை காண்பித்து மகாதேவ் -இடம் பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் சென்றால் புகைப்படத்தை காட்டி மிரட்டவும் வீடியோ எடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்

இதனை அடுத்து மூதாட்டியை நிர்வாணமாக வீடியோ எடுத்த செல்போன் குறித்து விசாரணை நடத்திய போது அரும்பாக்கம் அம்பேத்கர் காலனி பகுதியில் மறைத்து வைத்து இருப்பதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மூதாட்டியை நிர்வாணமாக வீடியோ எடுத்த கொள்ளையனான துரைசிங்கம் மற்றும் துரைபாண்டியன் ஆகியோரை அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்

அப்போது இருவரும் தப்பி ஓடி உள்ளனர். அவர்களை காவல் துறையினர் துரத்திச் சென்றபோது கொள்ளையர்கள் சுவர் ஏறி குதிக்கும் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் காவல் துறையினர் செல்போனை பறிமுதல் செய்து மூதாட்டியின் நான்கு நிர்வாண வீடியோக்களை அழித்தனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் கத்தியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பிரபல கொள்ளையன் ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.