தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் நியாய விலை கடைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், பிரதி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைக்கு அரசு விடுமுறையாகும்.
எனவே, பொங்கல் பரிசு வழங்கும் பணி நடக்கவிருப்பதால் ரேஷன் கடைகளுக்கு வருகின்ற 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை தவிர்க்கப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 16ஆம் தேதி வியாழக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தள்ளாத வயதில் ஊராட்சித் தலைவரான நல்லம்மாள் - பொதுமக்கள் வாழ்த்து!