சென்னை: தனியார் கல்லூரியில் படித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் பல்லாவரத்திலுள்ள திரையரங்கில் படம் பார்த்து விட்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் போது லாரி மோதியதில் விபத்தில் சிக்கினர். இதில் உயிருக்கு போராடி வந்த தன் நண்பனை காயமடைந்த மற்றொரு நண்பன் காப்பாற்ற சாலையில் வந்த வாகனங்களை மறித்து உதவி கேட்டுள்ளார்.
மழை பெய்து வந்ததால் யாரும் உதவி செய்ய வராத நிலையில், அவ்வழியாகச் சென்ற ரோந்து வாகனத்தில் சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு காவல்படை இரண்டாம் நிலை காவலர் ராஜூ ஆகியோர் உயிருக்கு போராடிய நபரையும் படுகாயமடைந்த அவரது நண்பரையும் தங்களது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இருப்பினும், உயிருக்கு போராடிய மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெயர் பநீந்திரா. படுகாயமடைந்த மற்றொரு மாணவரான விஷ்ணு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: வேப்பேரியில் துணி கடையில் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள்...