ETV Bharat / state

கார் பயணிக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராதம் அனுப்பிய காவல் துறை - Traffic Police

சென்னையில் காரில் சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராத செலான் அனுப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் பயணிக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராதம் அனுப்பிய காவல் துறை

author img

By

Published : Nov 3, 2022, 10:36 PM IST

சென்னை: சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர், சஞ்சய் குமார். இவர், தனியார் பயிற்சி நிறுவனத்தில் மென்பொருள் நிறுவனங்களுக்குப்பணிக்கு செல்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சஞ்சய் குமார், கடந்த மாதம் புதிய கார் (Hundai Creta) ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி இவருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், ’வேப்பேரி பகுதி வழியாக கடந்த மாதம் 19ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல், பின்னால் அமர்ந்து சென்ற தவறுக்காக 100 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி வந்திருந்தது.

பின்னர் அடுத்த சில விநாடிகளில், அதே விதிமீறலுக்காக அடுத்தடுத்து 54 தனித்தனிச் செலான்கள் வாயிலாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாகக்கூறி ஒவ்வொன்றிலும் 100 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது.

கார் பயணிக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராதம் அனுப்பிய காவல் துறை
கார் பயணிக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராதம் அனுப்பிய காவல் துறை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர் சஞ்சய் குமார், தான் அவ்வழியாக செல்லாத நிலையில் எவ்வாறு அந்த அபராதத்தை செலுத்தமுடியும் என சென்னை காவல்துறையின் இணையதள முகவரிக்கு இதுதொடர்பாக அந்த வாகனப்பதிவு எண் இருசக்கர வாகனத்தின் எண் இல்லை எனவும், காரின் பதிவு எண்ணை வைத்து தவறாக வழக்குப்போடப்பட்டுள்ளதாகவும் தனது தரப்பு விளக்கத்தைப் புகாராக அளித்து உரிய நடவடிக்கைக்கு வேண்டியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவராக போக்குவரத்து காவல்துறையைத்தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது 54 முறை ஒரே குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, நடந்த தவறு என பதிலளித்ததுடன், அதை சரிசெய்ய adctraffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட செலான்களை இணைத்து, பரிந்துரை கடிதம் அனுப்பினால் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் எனத்தெரிவித்துள்ளனர்.

அதேபோல காரின் பதிவு எண்ணை வைத்து இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து சென்றவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக எப்படி வழக்குப்போட்டுள்ளீர்கள் என்று விளக்கம் கேட்டபோது, இது Manual முறையில் பதியப்பட்ட வழக்கு இல்லை எனவும், சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காரில் சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராத செலான் அனுப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரின் பதிவு எண்ணை வைத்து காரின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது தலைக்கவசம் அணியவில்லை என 54 முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதேபோன்று தவறுதலாக ஏராளமானோருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தி ஊடகத்தினர் மத்தியில் செய்தியாக பரவவே, உடனடியாக காவல் துறையினர் தலையிட்டு, சஞ்சய் குமாருக்கு நடைபெற்ற தவறுதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்; அபராதமும் கட்டத்தேவையில்லை எனவும் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை..!' - உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.