ETV Bharat / state

நித்தி ஆசிரமத்திலிருந்து மகனை மீட்கக் கோரிய தாயின் மனு - முடித்து வைப்பு

சென்னை: நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை என்றும், விருப்பப்படியே இருப்பதாகவும் ஈரோட்டைச் சேர்ந்த ப்ராணாசுவாமி கூறியதால், அவரை மீட்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Niti Ashram  madras high court  The mother's plea to rescue her son from the Niti Ashram  நித்தி ஆசிரமத்திலிருந்து மகனை மீட்க கோரி தாய் மனு  நித்தியானந்தா ஆசிரமம்  நித்தியானந்தா
நித்தி ஆசிரமத்திலிருந்து மகனை மீட்க கோரிய தாயின் மனு முடித்து வைக்கப்பட்டது
author img

By

Published : Jan 6, 2020, 6:00 PM IST

கர்நாடக மாநிலம், பிடதியுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு ப்ராணாசுவாமி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களைச் சந்திக்க தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்கக் கோரியும், பல் மருத்துவரின் தாய் அங்குலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர். சுப்பையா மற்றும் ஆர். பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தபோது, ப்ராணாசுவாமியை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அப்போது, பல் மருத்துவரின் தாயார் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ப்ராணாசுவாமி, தனது விருப்பத்தின் பேரிலேயே நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

ப்ராணாசுவாமி தன் விருப்பப்படியே இருப்பதாகவும், சட்டவிரோத காவலில் இல்லை என்பதாலும், அவரது தாயார் அங்குலட்சுமி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்!

Intro:Body:நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை என்றும், விருப்பப்படியே இருப்பதாகவும் ஈரோட்டை சேர்ந்த ப்ராணாசுவாமி கூறியதால், அவரை மீட்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பிடதி-யில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு ப்ராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து அவரை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க கோரி அவரது தாய் அங்குலக்‌ஷ்மி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ப்ராணாசுவாமியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் அவரிடம் தாயாரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த ப்ராணாசுவாமி, தனது விருப்பத்தின் பேரிலேயே நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் தன்னை கட்டாயபடுத்தவில்லை என தெரிவித்தார்.

ப்ராணாசுவாமி தன் விருப்படியே இருப்பதாகவும், சட்டவிரோத காவலில் இல்லை என்பதாலும் அவரது தாயார் அங்குலக்‌ஷ்மி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.