ETV Bharat / state

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் தேவை, இருப்பு குறித்த அறிக்கைத் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவு! - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசி இருப்பு மற்றும் தேவை குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
Madras High Court
author img

By

Published : Apr 23, 2021, 5:49 PM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரியும் கோரியும், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தனர்.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று(ஏப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதுவையில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்களையும், தேவை குறித்த விவரங்களையும் விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய, அம்மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஏப்.26) ஒத்திவைத்தனர்.

அந்த அறிக்கையில் கரோனா தொற்றுத் தடுப்பு அறிவிப்புகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.