ETV Bharat / state

திருமணமான காதல் இணையர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

சென்னை: இளம் காதல் இணையர் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புக்காக சேலையூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

காதல் ஜோடி சேலையூர் காவல் நிலையத்தில் தஞ்சம்  காதல் திருமண வழக்குகள்  சென்னை மாவட்ட செய்திகள்  love couple took refuge in the police station  love couple  Chennai District News  Love Marriage Issues  the love couple took refuge in the police station in chennai
love couple took refuge in the police station
author img

By

Published : Dec 25, 2020, 8:11 AM IST

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி லோகேஸ்வரி (18) என்பவரை ஓராண்டுக்கு மேலாக காதலித்துவந்துள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. சென்னையில் பிரபல வழக்கறிஞரான, லோகேஸ்வரியின் தந்தை இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்துள்ளார்.

காவல் நிலையத்தில் தஞ்சம்

இந்நிலையில், தாம்பரம் அருகேயுள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டு அருகேயுள்ள சேலையூர் காவல் நிலையத்துக்குப் பாதுகாப்புக்காகத் தஞ்சம் அடைந்தனர்.

இதனால், காவல் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவர்கள் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: சக்சஸ் ஆன 4 மாத காதல் - எம்.எல்.ஏ பிரபு பிரத்யேகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.