ETV Bharat / state

‘சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனைச் செய்கிறது’ - இந்து ராம் பேச்சு - சென்னை மியூசிக் அகடமி

சென்னை: இந்துத்துவாவின் கொள்கைகளை நாட்டில் விதைக்க சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனை செய்துவருவதாக பொது விவாதத்தில் தி இந்து குழுமத் தலைவர் ராம் கூறியுள்ளார்.

தி இந்து குழுமத் தலைவர் ராம்
தி இந்து குழுமத் தலைவர் ராம்
author img

By

Published : Jan 28, 2020, 12:23 PM IST

Updated : Jan 28, 2020, 12:58 PM IST

சென்னை மியூசிக் அகாதமியில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.பி. ஷா, தி இந்து குழுமத் தலைவர் என். ராம், சட்ட நிபுணர் உமா ராமநாதன், பத்திரிகையாளர் ரோகிணி மோஹன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தி இந்து குழுமத் தலைவர் ராம் பேச்சு

பொது விவாதத்தில் பேசிய தி இந்து குழுமத் தலைவர் என். ராம், "தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை இந்திய இறையாண்மைக்கு வெளியில் உள்ளது என்பது தெரிகிறது. இந்த மூன்றும் ஆயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டியுள்ளது. இந்தியா கடந்துவந்த சுதந்திரப் போராட்டம், வரலாறு, தியாகங்கள் உள்ளிட்டவைகள் இவற்றால் உடைக்கப்பட்டுள்ளன எனலாம்.

இந்துத்துவாவின் கொள்கைகளை நாட்டில் விதைக்க சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனைச் செய்துவருகிறது. ஜே.என்.யூ, ஜாமியா மிலியா உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கு பின்னாலும் ஒரு அதிகாரத்தை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் தங்களின் நாட்டில் பேச்சு உரிமை, அடிப்படை உரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை அனுபவிக்க விரும்புவது தெரிகிறது.

இந்துத்துவா நேரடியாக மக்களாட்சி, ஜனநாயகத்திற்கு சவால்விட்டுள்ளது. மக்களின் உரிமைகள் அனைத்தும் அரசியலமைப்பின் சட்டங்களைத் திருத்தி மறுக்கப்பட்டுள்ளது. துர்பாக்கியமாக உச்ச நீதிமன்றமும் இதற்கு சரியான தீர்வு காணவில்லை" என்றார்.

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 27.01.20

இந்துத்துவாவின் கொள்கைகளை நாட்டில் விதைக்க சரியான் நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனை செய்து வருகிறது; பொது விவாதத்தில் தி இந்து குழுத தலைவர் ராம் பேச்சு...

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் தொடர்பான பொது விவாதம் சென்னை மியூசிக் அகடமியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.பி.ஷா, தி ஹிண்டு குழுமத் தலைவர் என்.ராம், சட்ட நிபுணர் உமா ராமநாதன் மற்றும் பத்திரிக்கையாளர் ரோகிணி மோஹன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொது விவாதத்தில் பேசிய ஹிண்டு ராம், என்.பி.ஆர், என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ ஆகியவை இந்திய இறையாண்மைக்கு வெளியில் உள்ளது என்பது தெரிகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டியுள்ளது இந்த மூன்றும். இந்தியா கடந்து வந்த சுதந்திரப் போராட்டம், வரலாறு, தியாகங்கள் உள்ளிட்டவைகள் இவற்றால் உடைக்கப்பட்டுள்ளது எனலாம். இந்துத்துவாவின் கொள்கைகளை நாட்டில் விதைக்க சரியான் நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனை செய்து வருகிறது. ஜே.என்.யூ, ஜாமியா மிலியா உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கு பின்னாலும் ஒரு அதிகாரத்தை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் தங்களின் நாட்டில் பேச்சு உரிமை, அடிப்படை உரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை அனுபவிக்க விரும்புவது தெரிகிறது. இந்துத்துவா நேரடியாக மக்கள் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு சவால் விட்டுள்ளது. மக்களின் உரிமைகள் அனைத்தும் அரசியல் அமைப்பின் சட்டங்களை திருத்தி மறுக்கப்பட்டுள்ளது.. துருதிஷ்டவசமாக உச்சநீதிமன்றமும் இதற்கு சரியான தீர்வு காணவில்லை என்றார்..

ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.பி.ஷா பேசுகையில், சாவர்க்கர் கூற்றுப்படி இந்திய மண்ணில் அடிப்படியாக கொண்டோர் வெளியிலிருந்து வந்தவர்கள், ஏன் அவர்களை ஏலியன்ஸ் என்றும் சொல்லலாம். மக்கள் பலமுறை இயற்கை சீற்றங்களால் தங்களது அனைத்து ஆவனங்களையும் இழந்துள்ள நிலையில் அவற்றை எவ்வாறு கொடுத்து தாங்கள் இந்திய பிரஜைகள் என உறுதிப்படுத்த முடியும்...? உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்டவர்களை பழிவாங்குவேன் என்கிறார் முதல்வர்... இது தன் மக்கள் மீது போர் தொடுப்பதற்கு சமமானதாகும். இந்த அரசாங்கம் தினந்தோறும் தனது எதிரிகளை பல வழிகளில் தேடுவதையே வேலையாக வைத்திருக்கிறது. போராட்டம் நடத்துவது என்பது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள உரிமையாகும். குறிப்பிட்டவர்களை பாகிஸ்தானுக்கு போகவேண்டியது தானே என்கிறார்கள்... அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து போல பிற நாடுகளுக்கு போகச் சொல்லாமே...? என்றார்..

சட்ட நிபுணர் உமா ராமநாதன் பேசுகையில், நான் இங்கு பிறந்தேன் என ஆதாரம் கொடுத்தாலும் என் கணவர் இந்திய குடியுரிமை பெறத் தகுதியற்றவர் என சொல்லிவிடுவார்கள். இதனால் என் குழந்தைக்கும் உரிமை கிடைக்காமல் போகலாம். என்.பி.ஆரை பொருத்தவரை ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்திலும் இருக்க வேண்டும் அதே சமயம் நீங்கள் குறித்து அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள். அரசு ஆவணங்கள் கொடுக்க தேவையில்லை என்கிறது. விபரங்கள் கொடுத்தால் போதும் என்கிறது. இதனை வைத்து இறுதி முடிவை அவர்கள் எடுக்கக் கூடும். நீங்கள் உங்கள் பார்வையை மாற்றிப் பார்த்தால் கூட நீங்கள் இந்திய பிரஜை அல்ல என அதிகாரிகள் சொல்லக் கூடும். இந்துக்கள் இந்து மதத்தில் இருக்க முடியாததால் மட்டுமே பிற மதங்களுக்கு சென்றுள்ளார்கள். ரூசோ சொல்கிறார் அரசுக்கு அடங்கிப் போவது மக்களின் வேலையல்ல என்று.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டை முன்னேற்றுவதற்கு மட்டுமேயன்றி மக்களை பிளவுபடுத்த அல்ல... அதனால்தான் மக்கள் அதற்கு ஒத்திழைக்க மறுக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர் ரோகினி மோகன் பேசுகையில், அசாமில் நான் பணியாற்றிய போது ஏற்பட்ட நேரடி அனுபவத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன். அதிகாரிகள் வீடுவீடாக சென்று அவர்கள் கேட்கும் ஆவணங்கள் கொடுக்கத் தவறினால் அவர்களை சந்தேகத்திற்கு இடமான பிரஜை என டி பிரிவில் வைத்து விடுகிறார்கள். இது போன்ற பாதிப்புகள் தொடர்வதால் பலர் தங்களின் அடையாளங்களை இழக்கிறார்கள் என்றார்..

பின்னர் விவாதத்தை பார்வையிட வந்த பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதற்கு நான்கு பேரும் பதில்களை அளித்தனர்..

tn_che_03_public_discussion_of_nrc_npr_and_caa_script_7204894Conclusion:
Last Updated : Jan 28, 2020, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.