சென்னை: வெளிநாட்டில் சட்டத்துக்கு புறம்பான பண பரிவர்த்தனையை செய்ததாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு அவருக்கு சொந்தமான ஜி வி பிலிம்ஸ் நிறுவனம் மீது போடாப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரர் மறைந்த ஜி வெங்கடேஸ்வரன் மற்றும் பிரபல தயாரிப்பாளரும் கல்வி நிறுவனமான ஐசரி கே கணேசன் இருவரும் தொடங்கிய ஜிவி ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளிநாட்டு பரிவர்த்தனையில் முறைகேட்டில் ஈடுபட்டது 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாட்டு வங்கிகளின் மூலம் ஜிடிஆர் ரசீதுகளை போலியாக உருவாக்கி, 172.8 கோடி ரூபாய் பணத்தை 16 கோடி பங்குகளாக இந்திய பங்குச் சந்தையில் மாற்றி தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த முறைகேடான பணத்தை வைத்து வாங்கப்பட்ட சொத்துக்களின் பட்டியலை அமலாக்கத்துறை கண்டறிந்து வருகிறது.
முதல்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள பல திரைகளைக் கொண்ட ஜி வி காம்ப்ளக்ஸ் என்ற 8.94 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜி.வி ஃபிலிம்ஸ் மட்டும் அதன் இயக்குநர்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அபராதம் இந்த முறைகேடுக்காக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் அண்ணனுக்கு கத்திக்குத்து