சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. முதலில் மிகக் குறைந்த அளவிலான முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் மாபெரும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகின்றன.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. மேலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சான்றிதழ்களைப் பெற்று அதன் விவரங்களைச் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் மூலம் அவர்களின் குடும்பங்களில் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா, எத்தனை தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர், 18 வயது நிறைவடைந்த குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்கிற விவரங்கள் பெறப்படவுள்ளன.
அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தீவிரமாக கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ன்று 4ஆவது சிறப்பு முகாம்: 25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு