ETV Bharat / state

மக்கள் அலட்சியம் காட்டினால்... சட்டம் தன் கடமையைச் செய்யும் - முதலமைச்சர் எச்சரிக்கை!

author img

By

Published : Apr 3, 2020, 5:36 PM IST

சென்னை: மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தவில்லையென்றால், 144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

cm palanisamy
cm palanisamy

சென்னை அபிராமபுரம், நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் குருநானக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்களைப் பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான வேட்டி, பனியன், லுங்கி மற்றும் உணவு பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகக்கொடிய தொற்று நோய். அதன் வீரியம் தெரியாமல் சிலர் விளையாட்டுத்தனமாக நேரத்தைக் கழித்து வருகிறார்கள். நோயின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தவில்லையென்றால், 144 தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை. ஒவ்வொரு உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மக்கள் வெளியே வருவது அதிகரித்தால், இனி சட்டம் தன் கடமையை செய்யும். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை, 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் தினமும் வருவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்திற்குத் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கு வேறு மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட்கள் வரவேண்டியுள்ளது. அவை விரைவில் வந்து சேரும்.

வெளிமாநிலை தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம். நியாய விலை கடைகளில் இம்மாதம் இறுதி வரை நிவாரணத் தொகை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் இருக்காது. அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகத் துறையினருக்கு, மூவாயிம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: விருதுநகரில் 10 பேருக்கு கரோனா தொற்று: 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.