சமையல் மாஸ்டர் கொள்ளையன்*
*காலையிலிருந்து மாலை வரை சமையல் மாஸ்டர், மாலையில் இருந்து இரவு முழுவதும் கொள்ளையன்*
*இரண்டு கெட்டப்புகளில் இருந்ததால் சுமார் ஆறு மாதத்திற்கு மேலாக போலீசாரின் கண்களில் சிக்காமல் தப்பித்த சமையல் மாஸ்டர்- ஷட்டர் கொள்ளையன்*
*பிறவியிலிருந்தே கொள்ளையனால் வாய் பேச முடியாதவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது*
*சென்னை அண்ணா நகர் அரும்பாக்கம் அமைந்தக்கரை திருமங்கலம் கொளத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை நேரங்களில் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த பலே சமையல் மாஸ்டர் கொள்ளையன் கைது*
*போலீசாரின் சந்தேக வலையில் சிக்காமல் இருப்பதற்காக மெட்ரோ ரயிலை பயன்படுத்திய சமையல் மாஸ்டர் கொள்ளையன்*
***************
சென்னை அண்ணாநகரில் சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள தனியார் ஜெராக்ஸ் கடையின் ஷட்டரை உடைத்து கடந்த 10 ம் தேதி கடையில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் பத்தாம் தேதி திருமங்கலம் அருகே சுமார் மூன்று கடைகளில் வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர் தலைமையில தனிப்படை அமைக்கப்பட்டு இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது
கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை எடுத்து அண்ணாநகர் தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் ஒரே ஒரு நபர் மட்டும் மேற்கண்ட கொள்ளை நடைபெற்ற சம்பவங்களில் பதிவாகி இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்
ஒவ்வொரு முறையும் கொள்ளை நடைபெற்ற பின்னர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அந்தக் கொள்ளையன் செல்வது சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது
இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது மெட்ரோ ரயில் நிலையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர் வந்து செல்வதும் பதிவாகியிருந்தது
மேலும் கொள்ளையனை பிடிப்பதற்காக அதே மெட்ரோ ரயில் நிலையத்தில் அவன் வந்து செல்லும் நேரத்துக்கு முன்பாகவே மாறுவேடத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தனர், அதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்கு அவன் மெட்ரோ ரயில் நிலையம் வந்தபோது தனிப்பிரிவு போலீசார் பிடித்தனர்
அரியலூர் மாவட்டம் பழமலை நாதபுரம் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது. சிவா திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில்(HOT CHIPS ) சமையல் மாஸ்டர் ஆக கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக வேலை பார்த்து பார்த்து வந்துள்ளார்
சிவாவிற்கு பிறவியிலிருந்தே வாய் பேச முடியாதவர் காலையிலிருந்து மாலை வரை ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து பின்னர் பணி முடிந்த பிறகு இரவு நேரங்களில் கொள்ளையனாக பல இடங்களில் பல கடைகளின் ஷட்டர்களை உடைத்து பணத்தை மட்டுமே கொள்ளை அடிப்பான் என்கின்றனர் அண்ணாநகர் போலீசார்
அதிகாலை 4 மணியிலிருந்து ஆறு மணிவரை தான் இவர் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவார் சம்பவங்களில் ஈடுபடுவார் இதற்காக கோயம்பேடு மெட்ரோ ரயிலில் ஏறி திருமங்கலம் அண்ணாநகர் ஆகிய இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்திவிட்டு பின்னர், மெட்ரோ ரயில் மூலம் ஆகவே அவர் வேலை பார்க்கும் இடத்துக்கு சிவா சென்றுவிடுவார். இதற்காக மெட்ரோ ரயிலில் யாருக்கும் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக monthly pass வாங்கி கொள்ளையடித்துள்ளார் சிவா
சிவா கொள்ளையடிக்கும் அடிக்கும் கடைகளில் விலை உயர்ந்த தங்க நகைகளோ, வைரங்களோ, விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தாலும் அவற்றை தொடக்கூட மாட்டான், பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பான் என்கின்றனர் தனிப்படை போலீசார்
கொள்ளையடிக்கும் பணத்தை city centre பீனிக்ஸ் மால் மால், போரம் மால், உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதும், அங்கு விலை உயர்ந்த ஆடைகளை ஆடைகளை உயர்ந்த ஆடைகளை ஆடைகளை வாங்குவதும் விலையுயர்ந்த உணவுகளை சாப்பிடுவது என இப்படித்தான் கொள்ளையடித்த பணத்தை செலவு செய்துள்ளார். மேலும் மேற்கண்ட இடங்களிலிருந்து தன்னுடைய செல்போனில் விதவிதமான ஆடைகள் அணிந்து செல்பி எடுத்து வைத்திருந்தாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சிவா மீது பல திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு கடைசியாக சிறையில் இருந்து வெளியே வந்த இருந்து வெளியே வந்த அவர், அதன் பின்னர் கடந்த 3 வருடங்களில் பல இடங்களில் இதே போன்று கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று எத்தனை கடைகளில் கொள்ளையடித்து இருக்கிறார் என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் அண்ணாநகர் போலீசார்