ETV Bharat / state

'ஃபேஷன் டெக் கல்வி நிலைய வளாக இயக்குநர் மீதான புகாரில் விசாரணை நடத்தலாம்.. ஆனால்..'  - உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி! - chennai

ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான புகாரில் விசாரணை நடத்தலாம். ஆனால், இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் மீதான புகாரில் விசாரணை நடத்தலாம்.. ஆனால்..  - உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

author img

By

Published : May 27, 2022, 10:17 PM IST

சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குநராக இளஞ்செழியன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டடப்பிரிவு உதவி இயக்குராக இளஞ்செழியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிட மாற்றம், சாதி அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், தான் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் தரமணி காவல் நிலையத்தில் இளஞ்செழியன் புகார் அளித்தார்.

இவ்வாறு இளஞ்செழியன் அளித்தப்புகாரின் அடிப்படையில், சென்னை நிப்ட் வளாக இயக்குநர் அனிதா மாபெல் மனோகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனிதா மாபெல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் மீதான புகாரில் விசாரணை நடத்தலாம்.. ஆனால்..  - உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!
ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் மீதான புகாரில் விசாரணை நடத்தலாம்.. ஆனால்.. - உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

அந்த மனுவில், “டில்லி தலைமையகத்தின் கண்காணிப்புப் பிரிவு கடிதத்தின் அடிப்படையிலும் தலைமை அலுவலகத்தின் ஒப்புதலின் அடிப்படையிலும் தான் இளஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. நிறுவனத்தின் நலன் கருதி எடுக்கப்படும் நிர்வாக முடிவுகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றமாகாது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால் விசாரணை இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது. அதேநேரம், விசாரணை என்ற பெயரில் அனிதா மாபெல் மனோகரை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்.

இந்த வழக்கு குறித்து காவல் துறை பதிலளிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.