ETV Bharat / state

வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் - காவல் ஆணையர்

author img

By

Published : Nov 28, 2019, 8:31 PM IST

சென்னை: தெற்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில், வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

பரிசளிப்பு விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்
பரிசளிப்பு விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை சைதாப்பேட்டையில் தெற்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் சிறந்த முறையில் முன்னேறுவார்கள்' என்றார்.

பரிசளிப்பு விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

மேலும், ' சிறார் மன்றங்கள் சார்பில் மாணவர்களுக்கு பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் திறமையை அங்கீகரிக்க பல தொண்டு நிறுவனங்களோடு கைகோர்த்து செயல்பட்டு வருகின்றோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா!

Intro:Body:தெற்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் எ.கே.விசுவநாதன் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் தெற்கு மண்டல இணை ஆணையாளர் மகேஸ்வரி, அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையாளர் பொ.பகலவன், புனித தோமையார் மலை காவல் மாவட்ட துணை ஆணையாளர் பிரபாகர், தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் காவலர் சிறார் மாணவ மாணவியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நிகழ்வில் காவல் ஆணையாளர் எ.கே.விசுவநாதன் பேசுகையில், வசதி குறைந்து உள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேறுவார்கள். மேலும் வசதி குறைந்த மாணவர்கள் ஒரு வேகத்தோடு கல்வி கற்று சாதனை புரிவார்கள் என தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஒருங்கிணைப்பு பாலமாக அமைய காவல்துறை செயல்பட வேண்டும் என்று சிறார் மன்றங்கள் சார்பாக பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் திறமையை அங்கீகரிக்க பல தொண்டு நிறுவனங்களோடு கைகோர்த்து செயல்பட்டு வருகின்றோம். வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை செயல்படுத்தி வருகின்றோம். இதற்காக அனைத்து காவல் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். குழந்தைகள், இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் மூலம் குற்றங்கள் குறைந்து போகின்றது, நல்ல பழக்கங்கள் வரும் என தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.