ETV Bharat / state

CAA எதிர்ப்பு: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த முகமது அபூபக்கர்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார்.

mohammad abu bakkar
mohammad abu bakkar
author img

By

Published : Jan 7, 2020, 9:34 PM IST

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந் முகமது அபூபக்கர்:

"என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் உள்ளன. நாங்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை. அதை மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றியமைப்பதே தவறு.

இந்தச் சட்டத் திருத்தத்தில் மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள்? இலங்கையை ஏன் சேர்க்கவில்லை? பூட்டானில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏன் சேர்க்கவில்லை? அஸ்ஸாமில் உள்ள அகதிகள் முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எங்களின் ஆதங்கம் என்னவென்பதை இந்த அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்திய இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம். இந்தியா எங்கள் தாய் நாடு. இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று சொல்லி அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர்களில் இஸ்லாமியர்களின் பங்கு அதிகம் உள்ளது.

‘நளினி விடுதலை மனு எப்போது நிராகரிக்கப்பட்டது’ - மத்திய அரசு விளக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், காயிதே மில்லத்தை பாகிஸ்தானோடு தொடர்புப்படுத்தி பாஜகவின் தேசியச் செயலாளர் பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது. காயிதே மில்லத் பற்றி பள்ளிப்பாடத்தில் சேர்க்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி கருத்துக் கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Intro:Body:குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதல்வர் அனைத்து கட்சி கூட்டதை கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தி உள்ளார்.

சட்டபேரவை இன்று கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முகமது அபுபக்கர் பேசுகையில்,

NRC NPR CAA இந்திய குடியமைப்பு சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்தக்கள் உள்ளது. நாங்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை. அதை மாதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றியமைப்பதே தவறு.

தொட்டில் குழந்தைகள் திட்டத்தை கொண்டுவந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அந்த திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் எப்படி ஆவணங்கள் தருவார்கள்.

இந்தத் தீர்த்தத்தில் மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள்? இலங்கையை ஏன் சேர்க்கவில்லை? பூட்டானில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏன் சேர்க்கவில்லை?

அசாமில் உள்ள அகதிகள் முகாமில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எங்களின் ஆதங்கம் என்னவென்பதை இந்த அரசாங்கம் விளங்கிகொள்ள வேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கு பாககிஸ்தான் வேண்டாம், இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று சொல்லி அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம், இந்திய சுதந்திரதிற்கு போராடியவர்களில் முஸ்லீம்களின் பங்கும் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் கயிதேமில்லத் அவர்களை பாக்கிஸ்த்தானோடு தொடர்பு படுத்தி பாஜகவின் தேசிய செயலாளர் பேசிவருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

காயிதே மில்லத் பற்றி பள்ளிப்பாடத்தில் சேர்க்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.