சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகளுக்கான நலத்திட்ட பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் உற்பத்தி செய்யும் வகையில் ரூ. 809 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய சிமெண்ட் ஆலையை திறந்து வைத்தார்.
மணப்பாறை மொண்டி பட்டியில் உள்ள காகித ஆலை நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
மேலும், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை, தொல்லியல் துறை, தொழில் துறை, நெடுஞ்சாலை துறை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) ஆகிய துறைகளுக்கான திட்ட பணிகளை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர்-காவிரி மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர்!