ETV Bharat / state

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில், ஒரே நாளில் 2.81 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ, கிண்டி மெட்ரோ ஆகிய மெட்ரோ நிலையங்களில் அதிக அளவிலான பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Chennai Metro
Chennai Metro
author img

By

Published : Jun 26, 2023, 4:13 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். சென்னை மெட்ரோ, டெல்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ, மற்றும் ஹைதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள, மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரிலிருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இது பயணிகளிடையே நல்ம வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுவதாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக, புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அந்த வகையில், ஜனவரி மாதம் 13ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 2,65,847 பயணிகளும், பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 2,61,668 பயணிகளும், மார்ச் மாதம் 10ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 2,58,671 பயணிகளும், ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 2,68,680 பயணிகளும், மே மாதம் 24ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 2,64,974 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்து உள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: டியூட்டி டைம் ஓவர்... ஓவர் டைம் பார்க்க விமானி மறுப்பு! 6 மணி நேரம் காத்திருந்த பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.