ETV Bharat / state

அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை ரத்து செய்யக்கோரிய வழக்கு: இன்று விசாரணை! - OPS

அதிமுக தலைமை அலுவலகத்தைச் சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எனக்கூறி எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை ரத்து செய்ய கோரி வழக்கு இன்று விசாரணை!!

author img

By

Published : Jul 14, 2022, 9:26 AM IST

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை ரத்து செய்யக்கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'பொதுக்குழுவின்போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பாதுகாப்புக்கோரி கட்சியின் அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச்சென்றுள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளித்தும், காவல் துறையினர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தைச் சீல் வைத்ததை ரத்து செய்யவேண்டும்: சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும் எனவும், அதிமுக தலைமை அலுவலகத்தைப் பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, அதிமுக கட்சி அலுவலகத்தைச் சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்குத்தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், எடப்பாடி பழனிசாமி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது எனவும், இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்று அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. வழக்கு பட்டியலில் 82 மற்றும் 83ஆவது வழக்குகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் சென்னை வந்தன

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.