ETV Bharat / state

சென்னையில் "சூது கவ்வும்" பட பாணியில் பெற்றோரை ஏமாற்றிய சிறுவர்கள்! - சென்னை மாவட்ட காவல்துறை

சென்னை: ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறி பெற்றோரிடம் நாடகமாடிய சிறுவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

kidnap
kidnap
author img

By

Published : Oct 9, 2020, 9:08 AM IST

சென்னை திருவல்லிக்கேணி சுபத்ரால் தெருவைச் சேர்ந்தவர், டோளா ராம். இவர் இருசக்கர வாகன உதிரி பாகக் கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் தேவேந்திரன்(14) 9ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று (அக்.8) டியூசனுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தேவேந்திரனின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தந்தை டோளா ராமிற்கு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 'உனது மகனை கடத்தி விட்டதாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் தரவில்லையென்றால் கொன்று விடுவோம்' என டோளா ராமை மிரட்டியுள்ளனர். இதனைக் கேட்டு டோளா ராம் பதற்றமடைந்தார். மீண்டும் சிறிதும் நேரம் கழித்து இவரைத் தொடர்புகொண்டு பேசிய சிறுவன், தன்னை ஒரு கும்பல் கடத்தி சேப்பாக்கம் ஸ்டேடியம் புலூ கேட் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, அண்ணாசாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரைக் கண்டுபிடித்து விசாரித்தபோது, தேவேந்திரனுடன் அவரது நண்பன் மட்டும் ஆட்டோவில் ஒன்றாக வந்து சேப்பாக்கம் பகுதியில் இறங்கியதாகத் தெரிவித்தார்.

விசாரணையில் முன்னுக்குப்பின் பதிலளித்த சிறுவனிடம் காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் டியூசனுக்கு செல்வதாகக்கூறி, நண்பர்களுடன் தேவேந்திரன் ஊர் சுற்றியுள்ளார். நேரமாகிவிட்டதால் தந்தையின் அடிக்குப் பயந்து தேவேந்திரன் கடத்தல் நாடகம் நடத்தி தந்தையை மிரட்டியது தெரியவந்தது. உண்மை தெரிந்ததால், சிறுவன் மீது எந்த வழக்கும் போடாமல் ஜாம் பஜார் காவல் துறையினர் எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கொளத்தூர் பகுதியிலும் கடத்தல் நாடக சம்பவம் நடந்துள்ளது. சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் யூசுப்பின் மகன் உமர்(14). நேற்று மாலை விளையாட சென்ற உமர் இரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு தாமதமாக வந்த உமரிடம், யூசுப் விசாரித்தபோது ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தன்னை கடத்திக் கொண்டு சென்று, பெரம்பூர் ஜமாலியா பகுதியில் சென்று விட்டதாகக் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த யூசுப் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் சிறுவனிடம் காவல் துறையினர் விசாரித்த போது அவரும் பொய்சொல்லி நாடகமாடியது தெரியவந்தது.

இதையும் படிங்க: வதந்திகள் எனக்குப் பழகிவிட்டன - குஷ்பூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.