இது குறித்து பல்கலைகழக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 2019-20ம் கல்வி ஆண்டிற்கான கால்நடை இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புகின்ற மாணவர்கள் மே 8ஆம் தேதி முதல் ஜூன்10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஜூலை 10 மற்றும் 11 ஆகிய இருதினங்களில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.