பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-20ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களுக்கு அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு,
- 40-52 பக்கங்கள் - ரூ.30
- 56-72 பக்கங்கள் - ரூ. 40
- 76-92 பக்கங்கள் - ரூ.50
- 96-116 பக்கங்கள் - ரூ.60
- 120-136 பக்கங்கள் - ரூ.70
- 352-368 பக்கங்கள் - ரூ.180
10ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை நிலவரம்:
- தமிழ் - ரூ.130
- ஆங்கிலம் - ரூ.120
- கணக்கு - ரூ.180
- அறிவியல் - ரூ.180
12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை நிலவரம்:
- தமிழ் - ரூ.120
- சிறப்புத் தமிழ் - ரூ.150
- ஆங்கிலம் - ரூ.130
- கணக்கு பகுதி-1 - ரூ.170
- இயற்பியல் பகுதி-1 - ரூ.180
- வேதியியல் பகுதி-1 - ரூ.160
- தாவரவியல் - ரூ.170
- விலங்கியல் - ரூ.170
- பொருளாதாரம் - ரூ.170
- வணிகவியல் - ரூ.160
- கணக்குப் பதிவியல் - ரூ.180
விற்பனைக்கு உரிய பாடப்புத்தகங்களின் விலை அதிகபட்சமாக ரூ.180 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச பாடப்புத்தகங்கள் 50 விழுக்காடு அளவிற்கு அச்சிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மே இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, பள்ளி திறந்த முதல்நாளே புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.