ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2ஆம் தாள் தேர்வு தொடக்கம் - Tet Exam 2019

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இரண்டாம் தாள் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

TET PAPER 2 EXAM
author img

By

Published : Jun 9, 2019, 10:24 AM IST

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் தாள் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றுவருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 'இரண்டாம் தாள்' நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வு 1,081 மையங்களில் 32 மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது.

காலையிலேயே தேர்விற்கு பதிவு செய்தவர்கள் ஆர்வமுடன் தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்தனர். பெண் ஆசிரியைகள் தங்களது கணவருடன் வந்திருந்தனர். சில தேர்வர்கள் தங்களின் கைக்குழந்தைகளையும் தூக்கி வந்திருந்தனர். குழந்தைகளை தங்களது கணவர், உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வினை எழுத தேர்வு அறைக்குச் சென்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு
தேர்வர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கபட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் யாரும் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்வர்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு அதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் தாள் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதியவர்கள் தெரிவித்தனர்.
தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், அடுத்துவரும் மூன்று ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Intro:ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 துவங்கியது

Body:சென்னை, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிய பி.எட் .ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்த ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வினை எழுத நாலு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் பதிவு செய்துள்ளனர்.
திருமண நடைபெறும் இன்று காலையில் பதிவு செய்தவர்கள் ஆர்வமுடன் தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்தனர். பெண் ஆசிரியைகள் தங்களது கணவருடன் வந்திருந்தனர். சில தேர்வர்கள் தங்களின் கை குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். குழந்தைகளை தங்களது கணவர் மற்றும் உறவினர்கள் இடம் கொடுத்துவிட்டு தேர்வினை எழுத தேர்வு அறைக்குச் சென்றனர்.
தேர்வர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கபட்டுள்ளார் தேர்வு அறைக்குள் யாரும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு அதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.