சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149-ஐ நீக்கம்செய்ய வேண்டும். 2021 பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை 177-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- 9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும்.
- பின்னடைவு காலிப்பணியிடங்கள், கடந்த 8 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்படப்பட வேண்டும்.
- தற்பொழுது கரோனா பெருந்தொற்று காரணமாக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதற்கான புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கப்பட வேண்டும்.
- இட ஒதுக்கீடு முறையைச் சரியாகப் பின்பற்றி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வயது, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தற்பொழுது தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு 50 இருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் வயதை 60 இருந்து 58 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலில் மேயர் பதவிக்கு ஏன் நேரடி - மறைமுகத் தேர்தல்?