ETV Bharat / state

ஆயிரம் பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஆயிரம் பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாய முறையில் மாடித் தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் தமிழ் வேந்தன் கூறியுள்ளார்.

terrace garden
author img

By

Published : Nov 5, 2019, 1:51 PM IST

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துவருகிறது. அதனடிப்படையில் பொதுமக்கள், மாணவ மாணவிகளிடையே இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இயற்கையை காக்க மாடி தோட்ட பயிற்சி
இயற்கையை காக்க மாடித் தோட்ட பயிற்சி

இதற்காக தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் முதல்கட்டமாக ஆயிரம் பள்ளிகளில் மாடித் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் தமிழ் வேந்தன் கூறுகையில்,

"நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளில் மாடித் தோட்டம் ஏற்படுத்தவுள்ளோம். இதற்காக ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செய்முறை வடிவம் செய்து காட்டப்படும். பள்ளி, கல்லூரிகளில் காலியாக இடமிருந்தால் மாடித் தோட்டம் அமைக்கப்படும்.

முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் ஆயிரம் பள்ளிகளில் இதனை செயல்படுத்தவுள்ளோம். இதற்காகப் பள்ளி தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர் தலைமையில் ஒரு தோட்டக்கலைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர், தோட்டக்கலை உதவி இயக்குநர், துறைத் தலைவர், மாணவர் என ஐந்து பேர் இதில் இடம்பெறுவர். விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு மாடித் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

தோட்டக்கலைத்துறையின் பரிணாம வளர்ச்சி
தோட்டக்கலைத்துறையின் பரிணாம வளர்ச்சி

தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்து அவற்றை அமைக்கும் வழிமுறைகளை ஆசிரியர்களிடம் கற்றுத் தருவார்கள். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிக்கும் மாடித் தோட்ட விழிப்புணர்வுக்காக இரண்டு ஆண்டிற்கு தலா ஐயாயிரம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் சதுரஅடி முதல் ஐந்து ஏக்கர் வரையில் மாடித் தோட்டம் அமைக்கப்படுகிறது.

இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். முதலில் அரசுப் பள்ளிகளில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். பின்னர் படிப்படியாக தனியார் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்

வகைவகையாய் வளர்ந்து வரும் கன்றுகள்
வகைவகையாய் வளர்ந்து வரும் கன்றுகள்

இயற்கை விவசாயத்தின் மீது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு மற்றவர்களுக்கு மாடித் தோட்டம் அமைக்க கற்று கொடுத்து எதிர்காலத்தில் விவசாய தூதுவர்களாகவும் மாறுவார்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Intro:Body:சென்னை // வி. டி. விஜய் // சிறப்பு செய்தி

வீடியோ பேட்டி இல்லை. தகவல் மட்டுமே. படத்தை பயன்படுத்தி கொள்ளவும்.

தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் 1000 பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாய முறையில் மாடி தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளே விவசாய தூதர்களாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் தமிழ் வேந்தன் கூறி உள்ளார்.

இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தமிழக வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை பல்வேறு புது முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு விதை பிள்ளையார், தீபாவளிக்கு விதை வெடி ஆகியவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த வகையில் பொதுமக்களிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளி, கல்லூரிகளில் மாடி தோட்டம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக தமிழக ஊரக பகுதிகளில் முதல் கட்டமாக 1000 பள்ளிகளில் மாடி தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் தமிழ் வேந்தன் நம்மிடையே பேசியதாவது:

இயற்கை விவசாயத்தை காக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தோட்டக்கலை துறை பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளில் மாடி தோட்டம் ஏற்படுத்த உள்ளோம். இதற்காக 6 -10 ஆம் வகுப்பு மாணவர்களை சென்றடையும் விதமாக இதை செயல்படுத்தி வருகிறோம். பள்ளிகளில் காலியிடம் இருந்தால் அதில் மாடி தோட்டம் அமைக்கப்படும். இல்லையென்றால் மாடியில் அமைக்கப்படும். முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 1000 பள்ளிகளில் இதை செயல்படுத்த உள்ளோம். இதற்காக பள்ளி தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர் தலைமையில் ஒரு தோட்டக்கலை குழு ஏற்படுத்த உள்ளோம். இந்த குழுவில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர், தோட்டக்கலை உதவி இயக்குனர், துறை தலைவர், மாணவர் என 5 பேர் இதில் இடம் பெறுவர். விருப்பமுள்ள மாணவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம். இதில் ஆயிரம் சதுர அடி முதல் 5 ஏக்கர் வரையில் மாடி தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதில் தோட்டக்கலை துறை சார்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று மாடி தோட்டம் அமைத்து கொடுத்து அவற்றை அமைக்கும் வழிமுறைகளை ஆசிரியர்களிடம் கற்று தருவார்கள். மாடி தோட்டம் அமைக்க விதை, உரம் , மான்வேட்டை, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்டவை அமைக்க ஆண்டு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் என 2 ஆண்டுக்கு தரப்படும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அந்த பள்ளிகளில் சத்துணவுக்கு பயன்படுத்தலாம் அல்லது மாணவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இதன் மூலம் ஆண்டு முழுவதும் காய்கறிகள் தட்டுபாடில்லாமல் கிடைக்கும். மேலும் இயற்கை விவசாயத்தின் மீது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு மற்றவர்களுக்கு மாடி தோட்டம் அமைக்க கற்று கொடுத்து விவசாய தூதுவர்களாகவும் மாறுவார்கள். இதற்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்த பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். முதலில் அரசு பள்ளிகளில் இதை நடைமுறை படுத்தி உள்ளோம். பின்னர் படிப்படியாக தனியார் பள்ளிகளுக்கும் இது விரிவு படுத்தப்படும் என்கிறார்.

மேலும், ஊரக காய்கறி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறையின் கீழ் பொதுமக்களுக்கு விதைகள் வழங்கி வருகிறோம். கிராம பகுதி மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் இயற்கை விவசாயத்தில் தன்னிறைவை அடையும் வகையில் ரூ. 25 மதிப்புள்ள இயற்கை விதைகளை வழங்கி வருகிறோம். இதற்காக ஒரு கிராமத்தில் 100 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு இயற்கை விதைகள் நேரடியாக வீடுகளுக்கே சென்று தோட்டக்கலை துறை பணியாளர்கள் பஞ்சாயத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 12 லட்சம் குடும்பங்களை இலக்காக நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். ஏற்கனவே மாணவர்களும் பள்ளிகளில் பயிற்சி பெறுவதால் கிராம மக்களும் சிரமமின்றி இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.