தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ராதா போட்டியிட உள்ளார். இதற்கு தென் சென்னை வட்டார ஆணையார் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருநங்கைகளால் முடியாதது எதுவுமில்லை. ஒரு ஆண், ஒரு பெண் சாதிப்பதை விட திருநங்கையால் சாதிக்க முடியும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் துணை நிற்போம், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறை, பெண்கள் பாலியல் விவகாரம் முதலியவற்றை ஒழிப்பேன். வீடு இல்லாமல் சாலையில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டித் தருவேன்.
திருநங்கைகளுக்கு கல்வி, தொழில் முதலியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கிறது அதற்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்தார்.