சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா (கோவிட் 19) வைரஸ் தொற்று, பல்வேறு நாடுகளுக்கு பரவிவருகிறது. அதனால் சீனா, ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் 427 பயணிகளுடன் செல்லக்கூடிய விமானத்தில் 20 பேர் மட்டும் பயணம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குவைத், பக்ரைன், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன. இந்த நிலையில், இன்று ஹாங்காங்-சென்னை செல்லும் கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ் விமானம், குவைத்-சென்னை செல்லும் குவைத் ஏா்லைன்ஸ் விமானம். அத்துடன் ஏா் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் பத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆக உயர்வு!