சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த சுஷ்மிதாவுக்கு (23), கடந்தாண்டுதான் நாகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நாகராஜ் கார்பெண்டர் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில், ஐந்து மாத கர்ப்பமாக இருந்த சுஷ்மிதா, கர்ப்பம் தரித்த நாள் முதலே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். கர்ப்பத்தைக் கலைத்துவிடுகிறேன் எனப் பலமுறை வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டுப் பார்த்துள்ளார். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் வலியைப் பொறுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்தடுத்த மாதங்கள் பிரசவ வலி அதிகரிக்கும் என பயந்த சுஷ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.