ETV Bharat / state

'4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை' - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முதல்வரின் தனிப்பிரிவில் மனு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது.

teachers association
teachers association
author img

By

Published : Feb 25, 2020, 3:02 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் பேசுகையில், 'மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் 2014ஆம் ஆண்டு கணக்கர், மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்து 512 நபர்கள் எட்டாயிரத்து 400 ரூபாய் ஊதியத்திற்கு நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர். ஒட்டுமொத்த கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக மாறி வரும் காலத்தில் அனைத்து பணிகளையும், இவர்கள் செய்து வருகின்றனர். இருந்தும் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை இதுவரை வழங்காதது வருத்தமளிக்கிறது.

கணக்கர் மற்றும் மேலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 ஆண்டுகள் சேர்த்து வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பணி நிரந்தரம் செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு எதுவும் வழங்கப்படுவது இல்லை' என குற்றம்சாட்டினார்.

மேலும், உயர் கல்வி படித்த சுமார் 4500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணை வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும்: மனித பாதுகாப்பு கழகம் கோரிக்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.