அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மட்டுமே இசைக்கப்படும் வங்காள மொழியிலான தேசிய கீதப் பாடலை அரசுப் பள்ளி ஆசிரியை தமிழில் பாடியுள்ளார். மாணவிகளுக்கு நடுவில் நின்றுகொண்டு அவர் பாடும் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
'ஜன கண மன' என்று தொடங்கும் தேசிய கீதப் பாடலை 'இனங்களும், மொழிகளும், பல இருந்தும் மனங்களில் பாரத தாயே’ என ஆரம்பமாகிறது தமிழ் பாடல். முதலில் ஆசிரியை மட்டும் பாடினார், பின்னர் அவரைத் தொடர்ந்து மாணவிகளும் ஆசிரியையுடன் இணைந்து பாடுகின்றனர். இப்பாடலை பலரும் வரவேற்ற நிலையில், சிலர் இதன் மொழியாக்கம் தவறு என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: விமானப்படை தினம் - போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதிகள்!