தமிழகத்தில் 2018 - 2019ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 2,144 காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த செப்டம்பர் 27, 28, 29ஆம் தேதிகளில் கணினி வழித்தேர்வு நடைபெற்றது. காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் கடந்த 8, 9ஆம் தேதிகளில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 11 மாவட்டங்களில் நடந்தது.
அப்போது 15 பாடங்களுக்குரியவர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
15 பாடங்களில் தற்போது முதற்கட்டமாக அரசியல் அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணிதம், நுண்ணுயிரியில், வணிகவியல், மனை அறிவியல், வேதியியல், உடற்கல்வியியல் ஆகிய 12 பாடங்களுக்குத் தேர்வான ஆசிரியரின் விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 5 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடையாது!