ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கு 27 ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2 வரை திருத்த அனுமதி

author img

By

Published : Jul 24, 2022, 9:03 PM IST

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2202 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரையில் விண்ணப்பித்தனர்.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்க 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை னுக்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 27 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்படுகிறது.

மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளும்பொழுது கவனமாக செயல்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் புதுப்பித்தவுடன் முன்பக்கத்திலுள்ள சமரப்பி (Sahmit) பொத்தானை அழுத்தி செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களைச் செய்யக் கூடாது. எனவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் மீண்டும் சரிபார்த்துக் கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் செல்போன் எண் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி (Email ) மற்றும் கல்வித்தருதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் 1, தாள் 2 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.