கரோனா பெருந்தொற்றால் ஏற்கனவே அரசு டாஸ்மாக் கடைகளின் நேரத்தை 1 மணி நேரம் குறைத்து நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்ததால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை பின்பற்றுமாறு அரசாணை பிறப்பித்தது.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் டாஸ்மாக் கடை விடுமுறை என்பதை அறிந்து மதுபிரியர்கள் அதிகமான அளவில் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள விரும்பியதால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதியம் மதுபிரியர்களின் எண்ணிக்கை சுமாராக இருந்தது. இருப்பினும் மாலை நேரங்களில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. பின்னர் இரவு 8 மணிக்கு பின்னர் தடுப்பு கம்பியையும் தாண்டி மது பாட்டில்கள் வாங்க கூட்டம் அலைமோதியது என்று டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்று மாதங்களுக்கு கரோனா தடுப்பூசி மீதான கலால் வரி ரத்து!