ETV Bharat / state

டான்செட், சீட்டா தேர்வுகள்: ஜன.10 முதல் விண்ணப்பம்.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! - CEETA

TANCET & CEETA Exam: டான்செட் மற்றும் சீட்டா தேர்வுகளுகு மாணவர்கள் ஜன.10ஆம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

anna university
அண்ணா பல்கலைக்கழகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 8:06 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், வளாக கல்லூரி, இணைவு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்குத் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போல், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்குக் கடந்த ஆண்டு முதல், பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA) எனும் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

அதன்படி, 2024-25ஆம் கல்வியாண்டிற்கான படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (சீட்டா-பி.ஜி) ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி அடுத்த இதுகுறித்த விரிவான தகவல் நாளை வெளியிடப்படும். மாணவர்கள் ஜனவரி 10 ம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 9ம் தேதி காலையிலும், எம்.பி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அன்றைய தினம் பிற்பகலிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதுநிலை பொறியியல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 10ம் தேதி தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வுகள் மாநிலம் முழுவதும் 14 நகரங்களில் நடத்தப்படும், என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Kalaingar 100 Live: தொடங்கியது கலைஞர் நூற்றாண்டு விழா.. திரை பிரபலங்கள் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.