இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சிறப்பாக நடத்திவருகின்றது. இதன் தொடர்ச்சியாக 46ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கி வைத்தார். சுற்றுலாப் பொருட்காட்சியில் மாநில அரசின் ஆக்கப்பூர்வ பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களையும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான ஹோட்டல் தமிழ்நாடு விடுதி உள்ளது. இதன் அருகே உள்ள இடத்தில் 25ஆம் தேதி காலை 10 மணி அளவில் தீ இல்லாத சமையல் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும் நபருக்கு ரூ.5000 மதிப்புள்ள பரிசு கூப்பன், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.3000 பரிசு கூப்பனும் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கும் நபருக்கு ரூ.2000 பரிசு கூப்பனும் வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் போட்டிக்கு தாங்களே சொந்தமாக பாத்திரங்களையும் சமைக்க தேவையான பொருட்களையும் கொண்டுவர வேண்டும். இதற்கான பதிவை மின்னஞ்சல் வழியாகவும், சுற்றுலா கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் வழியாகவும் மற்றும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பரிசுகள் மாற்றத்தக்கவை அல்லது பரிமாற்றம் செய்யக்கூடியவை அல்ல, அவை பணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான விடுதிகளில் தங்குவதன் மூலம் ஆறு மாதங்களில் மாற்றி கொள்ளலாம். தீ இல்லாத சமைக்கும் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு நடுவர்களின் முடிவு இறுதியானது. பங்கேற்பாளர்கள் போட்டியில் கலந்துகொள்ள வரும் பயண செலவுகளை தங்கள் சொந்த செலவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 முகவரியிலும், 04425333333, 04425333850-54 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையும் படிங்க: சமையல் எண்ணெய் தன்னிறைவுக்கான தேவை: சிறப்புக் கட்டுரை