சென்னை:தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பாகுதிகளில் இருந்தும் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறு கிளமைகளில் கூடுதலாக பெருந்துகள் இயக்கப்படும் எனவும் தொலை தூரம் பயணிக்கும் பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேவர் மகன் படத்தில் ‘இசக்கி’ கதாபாத்திரமே மாமன்னன் - மாரி செல்வராஜ்
தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களுரு ஆகிய இடங்களுக்கு ஆயிரத்து 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் வரும் வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் என்ன?
மேலும், இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், அதுமட்டுமின்றி மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தினை கற்பிக்கும் பள்ளிகள் கோடைவிடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையின் நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் கோடை மழை தொடங்காமல், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் வெளியிலின் தாக்கம் குறைந்த பின்னர் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறுத் தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ilayaraja: 80வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா.. பரிசுடன் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!