இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோயம்புத்தூரில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 76 ஆயிரத்து 979 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 2504 நபர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிய முடிந்தது.
தமிழ்நாட்டில் ஒரு கோடியை கடந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை
தமிழகத்தில் ஒரு கோடியே 29 லட்சத்து 222 ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 7 லட்சத்து 26 ஆயிரத்து 26 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்ய முடிந்தது. அவர்களில் தற்போது 20 ஆயிரத்து 994 நபர்கள் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தி மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 3644 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 94 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 15 நபர்களும் அரசு மருத்துவமனையில் 15 நபர்களும் என 30 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,152 ஆக உயர்ந்துள்ளது.
வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த துரைக்கண்ணு முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் 13ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11 .15 மணிக்கு இறந்தார் என காவேரி மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அவரின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று காலையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜாகிரியில் அரசு மரியாதையுடன் சரவணா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இறந்த கரோனா நோயாளிகளின் வரிசை எண் 11,141 இல் அமைச்சர் துரைக்கண்ணு கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னை மாட்டம் 200533 - செங்கல்பட்டு மாவட்டம் 43,840
- கோயம்புத்தூர் மாவட்டம் 43,504
- திருவள்ளூர் மாவட்டம் 38023
- சேலம் மாவட்டம் 27,388
- காஞ்சிபுரம் மாவட்டம் 25,629
- கடலூர் மாவட்டம் 23,246
- மதுரை மாவட்டம் 18,778
- வேலூர் மாவட்டம் 17972
- திருவண்ணாமலை மாவட்டம் 17687
- தேனி மாவட்டம் 16250
- விருதுநகர் மாவட்டம் 15455
- தஞ்சாவூர் மாவட்டம் 15392
- தூத்துக்குடி மாவட்டம் 15087
- ராணிப்பேட்டை மாவட்டம் 14904
- கன்னியாகுமரி மாவட்டம் 14,947
- திருநெல்வேலி மாவட்டம் 14235
- விழுப்புரம் மாவட்டம் 13775
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் 12543
- திருப்பூர் மாவட்டம் 12837
- புதுக்கோட்டை மாவட்டம் 10614
- கள்ளக்குறிச்சி மாவட்டம் 10292
- ஈரோடு மாவட்டம் 10393
- திண்டுக்கல் மாவட்டம் 9802
- திருவாரூர் மாவட்டம் 9680
- நாமக்கல் மாவட்டம் 9151
- தென்காசி மாவட்டம் 7826
- நாகப்பட்டினம் மாவட்டம் 6752
- திருப்பத்தூர் மாவட்டம் 6681
- நீலகிரி மாவட்டம் 6661
- கிருஷ்ணகிரி மாவட்டம் 6574
- ராமநாதபுரம் மாவட்டம் 6007
- சிவகங்கை மாவட்டம் 5912
- தருமபுரி மாவட்டம் 5620
- அரியலூர் மாவட்டம் 4385
- கரூர் மாவட்டம் 4170
- பெரம்பலூர் மாவட்டம் 2146
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 925
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 982
- ரயில் மூலம் வந்தவர்கள் 428