தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர் நலச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட அனைத்துச் செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுவந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் செய்திகள் சேகரிக்கும்போது ஏற்பட்ட கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.
மரணமடைந்த வேல்முருகன் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் கருணைத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தற்காலிகப் பணியாளராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் அவரது மனைவி சண்முகசுந்தரியைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
தற்போது ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் பாதுகாப்பிற்காக புதிய காப்பீடு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.