சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மார்ச் 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 519 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 143 நபர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் என மொத்தம் 147 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 624 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 லட்சத்து 51 ஆயிரத்து 469 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 1903 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று ஒரேநாளில் 387 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவரின் எண்ணிக்கை 34 லட்சத்து 11 ஆயிரத்து 545 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 21 என உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியால் பார்வை குறைபாடு? மாணவியின் பெற்றோர் பரபரப்பு புகார்