கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர். இதனால் அரசு சார்பில் அவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலர் நசிமுதீன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்திலுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.